அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். நமஸ்காரங்கள். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதாவது ” ராம” என்ற பெயர் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு முறை ராமா என்று சொல்லிவிட்டால் எவ்வளவு பாவங்கள் நீங்குமோ என்பதை கணக்கிடவே முடியாது. இதை நான் கூற வில்லை. த்ரேதா யுகத்தில் நாரத மகரிஷி லவ குசருக்கு உபதேசம் செய்துள்ளார். இவ்வருடம் பங்குனி மாதம் தேய்பிறை நவமி யன்று (27-03-26) ஶ்ரீ ராம நவமி பண்டிகை நடந்து முடிந்தது. ஆனால் நம் Chromepet Cultural Academy இல் வளர்பிறை நவமியான இன்று (11-04-26) தான் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும். இறை வணக்கம் முடிந்தவுடன், ஶ்ரீ ராம பிரான் தன் மனைவி சீதா பிராட்டி, லக்ஷ்மண, பரத சத்ருகன், ஹனுமத் சமேதராக அகாதமி வாசல் வழியாக பல்லக்கில், CCA ஹால் முழுதும் வலம் வந்து மேடைக்கு வர இருக்கிறார். இந்த கண்கொள்ளா காட்சியை நினைத்து பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது. தொடர்ந்து சத்குரு ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ” உத்ஸவ சம்பிரதாய கீர்த்தனைகள் பாடப்படும். பிறகு ஶ்ரீ பத்ராசல ராமதாஸர் , புரந்தர தாஸர், ஶ்ரீ பாபநாசம் சிவன் ஆகியோரின் கிருதிகள் மற்றும் கம்பரின் ராமாயண பாடல்கள் இசையோடு பாடப்படும். இந்த செவிக்கினிய இசை நிகழ்ச்சிக்கு பிறகு உங்கள் அனைவரையும் கவரக்கூடிய ராமாயண கும்மி, கோலாட்டம், ராம நாம சங்கீர்த்தனம் இவற்றோடு நம் CCA ஶ்ரீ ராமநவமி விழா முடிவடைகிறது. உங்கள் அனைவரையும் செலவே இல்லாமல் மாலை 6 மணிக்கு CCA வில் இருந்து நேராக அயோத்யாவுக்கு அழைத்துச்சென்று இரவு 8.30 மணிக்கு திரும்ப மீண்டும் CCA விக்கு கொண்டுவந்து விட்டு விடுவோம். நம் குரோம்பேட்டையில் நேரு நகரில் இருக்கும் குருக்ருபா மியூசிக் ஸ்கூல் இந்த ” ஶ்ரீ ராமானுபவம்” என்னும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி கொடுக்கிறது. இந்நிகழ்ச்சியில் 3 வயது குழந்தை முதல் 20 வயது வரை உள்ள பல சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், அவர்களின் குருமார்கள் என்று சுமார் 150 பேர்கள் கலந்து கொள்ள போகிறார்கள். இன்று மாலை CCA ஹால் விழாக்கோலம் பூண்டு கோலாகலமாக இருக்க போகிறது. மறந்து விடாதீர்கள். மறந்தும் வீட்டில் இருந்து விடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அதாவது நீங்கள் உங்கள் குடும்பத்துடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் வந்து எங்களோடு இணைந்து சிறப்பாக க்கொண்டாடி ” ராமானுபவத்தை” திவ்யானுபவமாக மாற்ற வேண்டும். எனவே மாலை சந்திப்போம். Regards, G Nagarajan,